போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர்கள் கைது

By செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலுக்கு முயன்றனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று அம்பேத்கர் சிலை முன்பு சங்கத் தினர் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் து.செந்தூர்ராஜன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் தே.முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் என்.வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட 211 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்