பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.5.75 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை காவல் துறை யினர் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வழியாக பிற மாவட்டங்களுக்கு தடை செய் யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக் கெட்டுகள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் காவல் துறையினர் தினசரி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிகொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரு பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பார்சல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா, பான்மசாலா பார்சல் செல்வது தெரியவந்தது. குட்கா பார்சல் கடத்தியதாக பெங்களூரு ஜே.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மருது (32) என்பவரை கைது செய்தனர். மேலும், குட்கா பார்சலுடன் சரக்கு வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பார்சலின் மதிப்பு ரூ.5.75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago