வாணியம்பாடியில் வரும் 13-ம் தேதி மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைபெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13-ம் தேதி நடைபெற வுள்ளது. வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.
இதில், டிவிஎஸ் குரூப்ஸ், அசோக்லேலண்ட், டொயோட்டோ, தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன் பவர் நிறுவனம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர். 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை கல்வி, ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, எம்பிஏ மற்றும் இளநிலை பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து முகாம் நாளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு விவரம் மற்றும் கல்விச்சான்றுகளுடன் பங்கேற்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago