கிரிக்கெட் போட்டியில் வென்ற சேலம் அணிக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், முதலிடம் பெற்ற சேலம் ஜலகண்டாபுரம் யுசிசிஎம்டிஎஸ் அணிக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அதிமுக சார்பில் முதல்வர் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் இளையோருக்கான, மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான மூத்தோர் கபடி போட்டியில், சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், கோபி, மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40 அணியினர் பங்கேற்றனர்.

இதில் லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அரையிறுதி போட்டிக்கு பி.மேட்டுப்பாளையம் வண்ணதமிழ் ஏ மற்றும் பி அணியினர் கோவை பி.ஜே மற்றும் கோபி ஏ.எம்.கே.சி ஆகிய நான்கு அணிகள் மோதின. இதில் பி.மேட்டுப்பாளையம் வண்ணத்தமிழ் ஏ அணியும் கோவை பி.ஜே அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியில் வண்ணத்தமிழ் அணி 18-11 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கமும் முதலமைச்சர் கோப்பையையும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.

கிரிக்கெட் போட்டி

புன்செய் புளியம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சேலம் ஜலகண்டாபுரம் யுசிசிஎம்டிஎஸ் அணிக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம்பிடித்த கேரளா கேலக்ஸி அணிக்கு ரூ.60 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற திருப்பூர் மேக்ஸிமஸ் அணிக்கு ரூ.30 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன. பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்