தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருச்சி பாலக்கரை பகுதியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவதூறாக பேசியதைக் கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பேச்சாளர் கோவை ரகமத்துல்லா பேசும்போது, “தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கல்யாணராமன் தொடர்ந்து பேசி வருகிறார். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண் டும்’’ என்றார்.

மாவட்ட நிர்வாகிகள் குலாம் தஸ்தகீர், செய்யது ஜாகீர், முகம்மது உசேன், முகம்மது ரபீக், ரசூல் மைதின் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்