திருநெல்வேலியில் ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்எம்யூ சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மதுரை கோட்ட தலைவர் என்.சுப்பையா தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.ஜே. அய்யப்பன், எம். கணேசன், எஸ். தமிழரசன் முன்னிலை வகித்தனர். தொமுச மாநில அமைப்புச் செயலாளர் ஏ.தர்மன், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் பி. சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் என்.உலகநாதன், டிடிஎஸ்எப் மாநில துணைத் தலைவர் எஸ்.சந்தானம், ஏஐசிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கணேசன், திருநெல்வேலி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் ஆர்.அந்தோணி ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
ரயில்வே துறை பணிமனைகள் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார்மயம் என்ற பெயரால் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க கூடாது. 55 வயது நிரம்பிய அல்லது 50, 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 252 ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையம் அருகில் எஸ்ஆர்எம்யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க கிளைத் தலைவர் சாபு தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். அகில இந்திய மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம், விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் முருகேசன், மாவட்ட குறு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago