சங்கரன்கோவிலில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண திமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவிவரம்: புளியங்குடி கோட்டைமலை ஆற்று குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சங்கரன்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், நகராட்சிநிர்வாகத்தின் சீர்கேடு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உறை கிணறுகள், மின் மோட்டார்கள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துவிட்டதால் பல நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. நீரேற்றும்நிலையங்கள், உறை கிணறுகளில் உள்ள பழுதுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சங்கரன்கோவில் பகுதிகளில் விசைத்தறிகளை நம்பி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலை பாதுகாக்க நூல் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க பரிந்துரைக்க வேண்டும். நூலுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நூல் விலை நிர்ணயக் குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்