நெல்லையில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமிருந்தது. மே, ஜூன் மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. அப்போது அதிகபட்சமாக 600 முதல் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் முழுக்க தினசரி ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை இருந்துவந்தது.

இந்நிலையில் தான் திருநெல்வேலி மாநகரத்திலும், அம்பாசமுத்திரம், மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, களக்காடுவட்டாரங்களிலும் கரோனாபாதிப்பு நேற்று கண்டறியப்படவில்லை என்று, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் 191 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 11 மாதங்களுக்கு பின் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்படாதது சுகாதாரத் துறையினருக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் நிம்மதி அளிக்கும் தகவலாக இருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 8,429 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 9 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 8,233 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 38 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்