பெரணமல்லூர் அருகே கல்குவாரி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செப்டாங்குளம் அதிமுக கிளைச் செயலாளர் நரசிம்மன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள், கல் குவாரிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு மற்றும் செப்டாங்குளம் கிராமத்தில் ஏற்கெனவே 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் நாங்கள், மிகப்பெரிய பாதிப்பை தினசரி அனுபவித்து வருகிறோம். இந்நிலையில் நம்பேடு கிராமத்தில் 3-வது கல் குவாரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக கல்குவாரி அமைய வுள்ள இடத்தின் அருகே விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சமூக பாதுகாப்பு காடுகள் உள்ளன. 200 மீட்டர் தொலைவில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளம் உள்ளது. புதிய கல்குவாரிக்கு ஆட்சேபம் தெரிவித்து கடந்தாண்டு ஜனவரி மாதம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப் போது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கல்குவாரி அமைக்க இருந்தது தடைபட்டது.
இந்நிலையில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்றதும், கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டு மீண்டும் ஒப்பந்ததாரர்கள் மனு அளித்துள்ளனர். கல்குவாரி அமைக்க அனுமதித்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, கல்குவாரி அமைக் கக்கோரி கொடுக்கப்பட்டுள்ள மனுவை நிரந்தரமாக தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றனர்.
இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர், ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago