திருப்பூர் மாவட்ட புறநகரில் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் மையங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் கேத்தனூர் பகுதியில், பொது சுகதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் அம்மா மினி கிளினிக் மையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் முதற்கட்டமாக 21 அம்மா மினிகிளினிக் மையங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.
2-வது கட்டமாக, 28 அம்மா மினி கிளினிக் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (நேற்று) இடுவாய், அறிவொளி நகர், கோடாங்கி பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.
இதைத்தொடர்ந்து, 40 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம்வழங்கப்பட்டது. பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago