நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. மனவளக்கலை மன்ற பேராசிரியர் உழவன் தங்கவேலு தலைமை வகித்தார். நூலகர் ப.செல்வம் வரவேற்றார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பங்கேற்று காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மலர்துவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர், மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகள், காந்தியடிகளுக்கும், நாமக்கல் கவிஞருக்கும் இருந்த தொடர்புகள், வாழ்வில் நேர மேலாண்மையின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்துப் பேசினார். வாசகர் வட்டத்தின் தலைவர் முனைவர் டி.எம்.மோகன் அறிமுகவுரை நிகழ்த்தினார். நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை செயலர் செந்தில்குமார், வாசகர் வட்ட துணைத்தலைவர் அமல்ராஜா, திருக்குறள் ராசாக்கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago