விருதுநகரில் பிப்‌.7.ல் திமுக பொதுக்கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது.

திமுக வடக்கு மற்றும் தெற்கு செயற்குழு நிர்வாகிகள் அவசரக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம்தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அவர்கள் பேசியதாவது: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் கடந்த 29-ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிப்ரவரி 7-ம் தேதி மாலை விருதுநகர் அருகே பட்டம் புதூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறுகிறார். இதற்காகத் தொகுதிக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மக்களை அழைத்து வர வேண்டும்.

தான் முதல்வராகப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எனவே அக் கூட்டத்தில் பங்கேற்க அதிகமான மக்களைத் திரட்ட வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம் எம்எல்ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்