அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை பொன்.குமார் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெரம்பலூரில் தமிழக கட்டிட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.குமார் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதேபோல, 12 லட்சம் கட்டுமான தொழிலாளர் களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அரசு பாரபட்சம் பார்க்காமல், அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். மிக அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களான இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடி. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், கட்டுமானத் தொழிலாளர் களுக்கும் எந்த வித புதிய திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அகற்றப்படவேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன் என்றார்.

பெரம்பலூர் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் உடனி ருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்