திருச்சியில் கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாக ராஜ பாகவதர் ஆகியோரது மணி மண்டபங்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திறக்க முயற்சி மேற்கொள் ளப்படும் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி.பன்னீர் செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு அவர் களது சிலைகளுடன் கூடிய மணிமண்டபங்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் கூறும்போது, “மணிமண்டபங்கள் கட்டும் பணி 75 சதவீதம் நிறைவ டைந்துள்ளது.
அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து, தேர்தலுக்கு முன் திறக்க முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago