மார்ச் 6-ல் உள்ளாட்சி பணியாளர்கள் எழுச்சி பேரணி

By செய்திப்பிரிவு

ஏஐடியுசி தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சம்மேளன மண்ட லக்கூட்டம் திருச்சி மிளகுபாறை யிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் தினக்கூலி, அவுட்சோர் சிங், ஒப்பந்தம் என்ற பெயர்களில் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.

கிராமப்புற தூய்மை காவலர் களுக்கு மாத ஊதியமாக ரூ.3,600 அறிவித்ததை, மார்ச் 16-ம் தேதியிலிருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6-ம் தேதி திருச்சியில் பல ஆயிரக்கணக்கான உள்ளாட்சித் தொழிலாளர்கள் பங்கேற்கும் ‘சம ஊதிய எழுச்சி’ பேரணி நடத்த முடிவு செய்யப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்