கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று மினி கிளினிக்கை திறந்துவைத்தார். அப்போது, அதன் முன்பக்கத்தில் இருந்த சாய்வு தளத்தின் கைப்பிடிச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் சுசிதா(7), பழனிவேல் மகள் சிந்துஜா(8) ஆகியோர் காயமடைந்தனர்.
இதைக்கண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்த சிறுமிகள் இரு வரையும் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தார். மேலும், அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
இடிந்தது எப்படி?
சமுதாயக் கூடமாக இருந்த பழைய கட்டிடத்துக்கு தற்போது வர்ணம் பூசி, மினி கிளினிக்காக மாற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திறப்புவிழாவின்போது, அப்பகுதி மக்கள் சாய்வுதளம் வழியாக முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றபோது, கைப்பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago