மின்-வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய புதிய வாக்காளர்களுக்குகால அவகாசம் நீட்டிப்பு திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

இளம் வாக்காளர்களுக்கு ‘மின்-வாக்காளர் அடையாள அட்டையை’ பதிவிறக்கம் செய்து கொள்ள காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், கடந்த மாதம் 25-ம் தேதி ‘மின்-வாக்காளர் அடையாள அட்டைகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு, வாக்காளர்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் மின்-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இருப்பினும், சிலர் மின்-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய வில்லை என தெரிய வருகிறது.

அதேநேரத்தில் மின்-வாக் காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் திட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, அதிக அளவில் பெறப்பட்ட கோரிக்கையின் படி இளம் வாக்காளர்களுக்கு மட்டும் ‘மின்-வாக்காளர் அடையாள அட்டையை’ பதிவிறக்கம் செய்ய இம்மாதம் (பிப்ரவரி-21) இறுதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, சிறப்பு சுருக்கத்திட்டம் 2021-ல் இடம் பெற்றுள்ள இளம் வாக்காளர்களின் கைப்பேசி எண்ணில் கால அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது அறிவிக்கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்