சுகாதாரத் துறை இணை இயக்குநர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவை காந்திபுரம் லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் ஸ்டான்லி மைக்கேல்(49). மருத்துவரான இவர், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு இணை இயக்குநராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். நேற்று திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்ட அவர், சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டான்லி மைக்கேல், அந்த இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்