தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஓய்வு பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் மாவட்ட ஆட்சியர் சு.மலர் விழி தலைமையில் நேற்று நடை பெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத் துக்கழக கும்பகோணம் கோட்டத் துக்கு உட்பட்ட கும்பகோணம், திருச்சி, கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பல்வேறு நிலை அலுவ லர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற 780 பேருக்கு சேமநலநிதி, கிராஜூவிட்டி, கம்யூட்டேஷன், விடுப்பு சம்பளம் என ரூ.186.51 கோடிக்கான காசோலைகளை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் 22,000-க்கும் மேற்பட்ட பேருந்து களுடன், சுமார் 1.40 லட்சம் ஊழி யர்கள் பணியாற்றி வருகின் றனர். இதுவரை இல்லாத வகையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ரூ.1,000 கோடிக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. கரோனா ஊரடங்கு காலத்தில் மற்ற மாநிலங்களில் 50 சதவீத ஊதியம் வழங்கப்பட்டது. தமிழ கத்தில் முழுமையான ஊதியம் வழங்கப்பட்டது. போக்குவரத் துத்துறைக்கு மட்டும் சம்பளம், ஓய்வூதியம் உட்பட மாதந்தோறும் ரூ.450 கோடி வழங்கப்படுகிறது என்றார்.
கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, மாவட்ட வருவாய் அலு வலர் சி.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்ப கோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆர்.பொன்முடி, போக் குவரத்துத்துறை மண்டல பொது மேலாளர்கள் (கரூர்) குணசேகரன், (கும்பகோணம்) செந்தில், (திருச்சி) ராஜ்மோகன், (நாகை) மாரியப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago