அபுதாபியிலிருந்து இரு தினங்களுக்கு முன் திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த சுகுமார்(28), திருவாரூரைச் சேர்ந்த அகமது அலி(31), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமதுல்லா(44) ஆகியோர் பசைக்குள் துகள்களாக மறைத்து தங்கம் கடத்தி வந்ததை விமானநிலைய சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூ.1.26 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago