புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் நேற்று திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி பேசியது:
சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகளில் கடன் வழங்கப் படாததால், தனியார் நிதி நிறு வனங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பெண்கள் சிக்கித் தவிக்கின்றனர். தமிழக முதல்வர் தன்னையும், ஆட்சியையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார் என்றார்.
பின்னர், கறம்பக்குடி அருகே டி.களபத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு நுழைவுசீட் கிடைக் காத வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஹரிஸ் மாவின் தாயார் வளர்மதியை சந்தித்து கனிமொழி ஆறுதல் கூறினார்.
மேலும், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்ல தேர்வாகி இருந்த பள்ளி மாணவி ஜெயலட்சுமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் ஒரு தொண்டு நிறுவனத்தை அணுகி தனது ஊரில் 135-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்ததற்காக அவரை பாராட்டினார்.
பின்னர், புதுக்கோட்டை, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, அன்னவாசல், விராலிமலை, தாயினிப்பட்டி, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago