காஜாமலை ஆர்பிஎஸ்எப் பயிற்சி மையத்தில் பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருச்சி காஜாமலையிலுள்ள ஆர்பிஎஸ்எப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த ரயில்வே பாதுகாப்பு படையின் 295 பெண் காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு படையில் (ஆர்.பி.எப்) பணிபுரிவதற்காக தேர்வு செய்யப்பட்ட 295 பெண் காவலர்களுக்கு திருச்சி காஜாமலையிலுள்ள ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்) பயிற்சி மையத்தில் கடந்த 25.11.2019-ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு, ரயில்வே தொடர்பான குற்றங்கள், சட்டங்கள், ரயில்களில் வெடிபொருட்களை கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல், தீயணைத்தல், ஆயுதங்களை கையாளுதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த காவலர்களுக்கு சான்றிதழ், சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கம் ஆகிய வற்றை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்தர் குமார், முதன்மை பயிற்சியாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்