சுகாதாரத் துறை இணை இயக்குநர் விபத்தில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவை காந்திபுரம் லெட்சு மணன் நகரைச் சேர்ந்தவர் ஸ்டான்லி மைக்கேல்(49). மருத்துவரான இவர், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையிலுள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் இணை இயக்குநராக சென்னை யில் பணிபுரிந்து வந்தார்.

திருச்சி கிராப்பட்டியிலுள்ள சகோதரி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று காலை காரில் புறப்பட்டார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஸ்டான்லி மைக்கேல் அந்த இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்