தென்காசியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் முதல் கட்ட மாதிரி வாக்குப்பதிவை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தலில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, தென்காசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தல் பயன்பாட்டுக்காக, முதல்நிலை சரிபார்ப்புக்குப் பின்னர் 3,260 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,680 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் செயல்பாட்டை சரிபார்க்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபாட் இயந்திரம் என அனைத்தும் ஒன்றிணைந்த 125 இயந்திரங்களில், வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது என்றார்.
நிகழ்ச்சியில் தேர்தல் வட்டாட்சியர் அமிர்தராஜ், செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago