நெல்லையப்பர் கோயிலில் தெப்பத் திருவிழா

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 19-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்கியது.

கடந்த 22-ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவமும், 28-ம் தேதி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தையொட்டியுள்ள தாமிரபரணியில் சுவாமிக்கு தீர்த்தவாரியும், நேற்று முன்தினம் கோயிலில் சவுந்தரசபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக்காட்சியும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி கோயிலுக்கு வெளியே சுவாமி சந்நிதியில் உள்ள வெளித்தெப்பத்தில் சுவாமி, அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருளும் வைபவம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்