திருவண்ணாமலையில் நாளை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் பிப்ரவரி 1-ம் தேதி (நாளை) முதல் நடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு, கடந் தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்தது முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப் பட்டது. இதனால், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெட்டி மூலமாக பெறப்பட்டன.

இதையடுத்து, கரோனா ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் தளர்வு அளித்ததால், மக்களிடம் இருந்து முந்தைய ஆட்சியர் கந்தசாமி நேரிடையாக மனுக்களை பெற்றார். இதன் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள் கிழமைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். மனுக்களை கொடுக்க வரிசையில் காத்திருந்த மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஆட்சியர் கந்தசாமி மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் குறைதீர்வு கூட்டத்தை கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ரத்து செய்தார். மேலும் அவர், மனுக்களை பெட்டியில் போடுமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார். அவ்வாறு போடப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ் சாட்டினர்.

இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம் வரும் 1-ம் தேதி (நாளை) முதல் ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் நடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்கள் நேரிடையாக பெறப்படும்.

தமிழக அரசு விதித்துள்ள கரோனா வழிகாட்டி நெறிமுறை களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்