வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனித நேய வார விழா

By செய்திப்பிரிவு

வேலூரில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சண்முகசுந்தரம் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனித நேய வார விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘மாணவ, மாணவிகள் சமுதாய உரிமை, பொருளாதார உரிமை, கல்வி உரிமைகளை பற்றி நன்கு தெரிந்து கொண்டு கல்வியை கற்று முன்னுக்கு வரவேண்டும். இந்திய சுதந்திர வரலாற்றில் அம்பேத்கர், தந்தை பெரியார், நாராயணகுரு போன்றவர்கள் சமுதாய சீர்திருத்தத்துக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மாணவர்கள் படிக்கும் வயதில் நல்ல முறையில் படித்து தங்கள் பெற்றோருக்கும், தங்கள் கிராமத்துக்கும், பள்ளிக்கும் பெருமை தேடி தர வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் வேணுசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்