திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடப் படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போலியோ ஒழிக்க கடந்த 25 ஆண்டுகளாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 26-வது ஆண்டாக இந்தாண்டும் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (31-ம் தேதி) போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறவுள்ளது. 2,031 முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து போடப்படவுள்ளன. மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்கம், தங்கும் விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் முகாம் மூலமாக சொட்டு மருந்து போடப்படும்.
இந்த பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என 7,814 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 2,19,952 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாம் நிறைவு பெற்ற, மறுநாளில் இருந்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து விடுப்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருத்து போடப்படும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago