கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

By செய்திப்பிரிவு

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நாளை முதல் தொடங்குகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோழி கழிச்சல் நோய் பாதிப்புகாரணமாக கோழிகளில் உயிரி ழப்பு ஏற்பட்டு, கிராம பொரு ளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கால்நடை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தி.மலை மாவட்டத்தில் 2.5 லட்சம் கோழிகளுக்கு கோழி கழிச்சல் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்