கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், சூலூர் தொகுதிக்கு நகர நிலவரி உதவி ஆணையர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், கோவை வடக்கு தொகுதிக்கு சமூக பாது காப்புத் துறை சிறப்பு துணை ஆட்சியர், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர், கோவை தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர், சிங்காநல்லூர் தொகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மேட்டுப்பாளையம் தொகுதிக்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலர், கிணத்துக்கடவு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர், பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர், வால்பாறை தொகுதிக்கு மாவட்ட ஆய்வுப் பிரிவு அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்களாக மேட்டுப்பாளையம் தொகுதிக்கு மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சிறப்பு வட்டாட்சியர், சூலூர் தொகுதிக்கு சூலூர் வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சிறப்பு வட்டாட்சியர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கோவை வடக்கு வட்டாட்சியர் மற்றும் அன்னூர் வட்டாட்சியர், கோவை வடக்கு தொகுதிக்கு கோவை வடக்கு உணவு வழங்கல் பிரிவு சிறப்புவட்டாட்சியர் மற்றும் அசிஸ்டென்ட் ரேஷனிங் ஆபிசர், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பேரூர் வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சிறப்பு வட்டாட்சியர், கோவை தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி தெற்கு மற்றும் மேற்கு உதவி ஆணையர்கள், சிங்காநல்லூர் தொகுதிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் மற்றும் கோவை தெற்கு சமூக பாதுகாப்புத் துறை சிறப்பு வட்டாட்சியர், கிணத்துக்கடவு தொகுதிக்கு மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு வட்டாட்சியர்கள், பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சிறப்பு வட்டாட்சியர், வால்பாறை தொகுதிக்கு வால்பாறை மற்றும் ஆனைமலை வட்டாட்சியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்