ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு திருச்சி யில் பயிற்சியளிக்கப் படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் வகையில், 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக ஆட்சியர் சி.கதிரவன் செயல்படுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில், மாநகராட்சி ஆணையர் – சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் மற்றும் மாநகராட்சி நிர்வாக அதிகாரி ஆகியோரும், ஈரோடு மேற்கு தொகுதியில், ஈரோடு ஆர்.டி.ஓ. மற்றும் வட்டாட்சியரும், மொடக்குறிச்சி தொகுதியில் கலால்துறை உதவி ஆணையர் மற்றும் மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டாட்சியரும் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்துறை தொகுதியில் ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் பெருந்துறை வட்டாட்சியரும், பவானி தொகுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி, பவானி வட்டாட்சியரும், அந்தியூர் தொகுதியில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி மற்றும் அந்தியூர் வட்டாட்சியரும் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோபி தொகுதியில் கோபி ஆர்.டி.ஓ. மற்றும் வட்டாட்சியரும், பவானிசாகர் தொகுதியில் ஈரோடு மாவட்ட உதவி இயக்குநர் (பஞ்சாயத்துக்கள்) மற்றும் சத்தியமங்கலம் வட்டாட்சியர் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு திருச்சியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago