ஆன்லைனில் பாடங்களை படிக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

ஆன் லைனில் பாடங்களை படிக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் என விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறுகிறது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் மொபைல் போனை பயன்படுத்தும் சில பள்ளி மாணவிகள் ஆர்வமிகுதியால் சமூக வலைத்தளங்களின் ஊடாக பலருடன் பேசுகின்றனர். ஆங்கிலம் நன்கு தெரிந்த சில மாணவிகள் பின்னணி எதுவும் தெரியாத வெளிமாநில நபர்களுடன் கூட சாட்டிங் செய்கின்றனர். இதனால் எதிர்காலங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளி மாணவிகள் செல்போனை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மாணவிகளுக்கும் அவைகளை சரியான வழிகளில் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் அனுப்பி மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் உரிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். விவரம் அறியாத பள்ளி மாணவிகள் தேவையற்ற நபர்களுடன் பழகி அதனால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, " அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும்

இதர காவல் ஆய்வாளர்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கும், ஆன் லைன் மூலம் கற்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்