மண்டபம் கடற்கரை அருகே தனியார் கேளிக்கை விடுதிக்கு சீல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை தோப்புக்காடு பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி அரசு அனுமதியின்றி கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, கேளிக்கை விடுதியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தோப்புக்காடு, தோணித்துறை பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து அனுமதியின்றி செயல்படும் விடுதிக்கு தற்காலிகமாகத் தடை விதித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதன்படி மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இரா.இளவரசி (பொறுப்பு), மண்டபம் கிராம நிர்வாக அலுவலர் உஷா ஆகியோர் தலைமையில் பேரூராட்சிப் பணியாளர்கள் தனியார் கேளிக்கை விடுதிக்கு ‘சீல்' வைத்தனர். மண்டபம் காவல் ஆய்வாளர் பொம்மையாசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்