வேலூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜி.லதா தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் விவாசய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசா யிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago