ஆட்சியர் அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு தினம், தொழுநோய் எதிர்ப்பு நாள்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு தினம் மற்றும் தொழுநோய் எதி்ர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் சுதந்திர போராட்டத்தில் பாடுபட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், ஜனவரி 30-ம் தேதி தீண்டாடமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய சேவையை நினைவுகூறும் வகையில் ஜனவரி 30-ம் தேதி தேசிய தொழுநோய் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நாளை (ஜன.30) அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாள் என்பதால், கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திக்கேயன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் செந்தில்குமார், தொழுநோய் துணை இயக்குநர் சித்திரைசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் தீண்டாமை ஒழிக்க உறுதி மொழியும், தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்