தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக கூட்டணி குறித்து ஜே.பி.நட்டா அறிவிப்பார் ஓபிசி அணித் தலைவர் கே.லட்சுமணன் தகவல்

By செய்திப்பிரிவு

பாஜக பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) அணி மாநில மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் கே.லட்சுமணன் அளித்த பேட்டி: 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முழுமையாக செயல் படத் தொடங்கியது. பிற்படுத் தப்பட்ட வகுப்பிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, வேலையில் வாய்ப்பு கிடைத்தது. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாதவற்றை, மோடி அரசு 7 ஆண்டுகளில் செய்தது.

பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி கேந்திரிய வித்யா லயா, நவோதயா, சைனிக், சட்டப்பள்ளி போன்றவைகளில் 27 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்பட் டுள்ளது. கல்வி உதவித்தொகை, தொழில் கடன் அதிகரித்து வழங் கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் அதிமுக நீடிக்கிறது என்பதை அக்கட்சியின் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றார்.

அப்போது, தமிழக பாஜக பிற் படுத்தப்பட்டோர் அணி இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்