உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் கருவிகள் விற்பனையாளர்கள் ஆகியோரின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடை பெற்றது.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சிறு- குறு விவசாயிகள் வேளாண் கருவிகளைப் பயன் படுத்தி விளைச்சலை அதிகப் படுத்த ஏதுவாக கூட்டுப் பண்ணைய திட்டம் 2016-17-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 20 விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் ஆர்வலர் குழு தொடங்கப்பட வேண்டும். இதேபோல, ஒரு கிராமத்தில் 5 உழவர் ஆர்வலர் குழுக்கள் தொடங்கப்பட்டு, 5 குழுவிலும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த 5 உழவர் ஆர்வலர் குழுக்களின் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு உழவர் உற்பத்தி யாளர் குழுவுக்கும் தமிழக அரசு தொகுப்பு நிதியாக வேளாண் கருவிகள் வாங்குவதற்காக ரூ.5 லட்சம் வழங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் 2020- 21-ம் ஆண்டு 77 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்கப்பட்டு, ரூ.3.85 கோடி பெறப் பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தொடங் கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, வேளாண் கருவிகள் வாங்குவதற்கு வழி செய்யும் வகையில் குழு நிர்வாகி கள் மற்றும் வேளாண் கருவிகள் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசியது:
உழவர் உற்பத்தியாளர் குழுவில் உள்ள 100 விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண் டும். அனைவரும் ஒருங்கிணைந்து சந்தைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து அதிக லாபம் பெற வேண்டும். மேலும், விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வ தற்கு தேவையான தொழில் நுட் பங்களை வேளாண் துறையிடம் பெற்று, அதன்மூலம் அதிக லாபம் பெற்று பயன் பெற வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்தி உட்பட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago