மழை, புயல், வறட்சி என தொடர் இழப்பை சந்தித்து வருவதால் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மழை, புயல், வறட்சி என தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதால் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் மாசிலாமணி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். கடந்த 26-ம் தேதி பல இடங்களில் விவசாயிகள் நடத்திய பேரணிக்கு அனுமதி மறுத்ததுடன், திருவாரூரில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி பொய் வழக்கு பதிவு செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் போர்வையில் ஊடுருவிய நபர் கள் மீது நடவடிக்கை எடுக்கா மல், விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்திய காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மேலும், பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி கடும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தொடர்ந்து மழை, புயல், வறட்சி என விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருவதால் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் டிராக்டர் ஜப்தி, நகை ஏலம், வீடுகளில் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையிலான புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இக்கூட்டத்தில் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படை யார், மாநில துணைச் செயலா ளர்கள் மாசிலாமணி, இந்தி ரஜித், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அயிலை சிவசூரி யன், காசி விஸ்வநாதன், கிருஷ் ணன், உலகநாதன், சோமையா, கலியமூர்த்தி, ஜீவா, முல்லை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்