தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று தர்ணா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சமூகநலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைசிங், சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கோயில்பிச்சை ஆகியோர் பேசினர். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago