சமூக விரோத செயல்களை தடுப்பதில் மக்களுக்கும் பொறுப்பு உண்டு தென்காசி எஸ்பி சுகுணாசிங் கருத்து

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டையில் மாயமான்குறிச்சி, குருவன்கோட்டை, குறிப்பன் குளம், கீழ பட்டமுடையார் புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கிராம கண்காணிப்புக் குழு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் தொடக்கவுரை யாற்றினார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ‘இணைந்த கரங்கள்’ திட்டத்தின்படி தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒரு கிராமக் காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர், பொதுமக்களி டையே இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதில் பொது மக்களுக்கும் பொறுப்பு உண்டு. எனவே, உங்கள் பகுதி கிராம காவலர்களிடம் கிராமத்தில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் மற்றும் அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம். கிராமக் காவலர்கள் மூலம் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கிராமத்தில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் குறைக்கப்படும்” என்றார்.

கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சாரதா ஆகியோருக்கு எஸ்பி பரிசளித்தார்.

மேலும் முதியோர், தூய்மைப் பணியாளர்கள், கிராம கண்காணிப்பு குழுவினர் மற்றும் கிராம தன்னார்வலர்களையும் கவுரவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்