விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது.
விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் ஏழு திரைகள் நீக்கி ஆறு கால தைப்பூச ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை அறக்கட்டளை மேளாளர் ஜெய. அண்ணாமலை தலைமையில் விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சன்மார்க்க அன்பர்கள் ஒன்றிணைந்து நலத்திட்ட உதவி வழங்கினர். இதில், அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 1,000 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆதரவற்ற ஏழை மக்கள் 1,000 நபர்களுக்கு பெட்ஷீட் மற்றும் வேட்டி, துண்டு சேலைகள் வழங்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஆதரவற்ற 1,000 குடும்பங்களுக்கு 6-வது கட்டமாக அரிசி, மளிகை, காய்கனிகள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago