திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் திருச்செங்கோட்டில் உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது 6 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை மையங்கள், சட்டப்பேரவை தொகுதிவாரியாக தேர்தல் அலுவலர்கள் வந்து செல்ல பாதை வசதி, வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல பாதை வசதி, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான வசதிகள், தபால் வாக்குகளை எண்ணும் மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்திகணேசன், காவல் துணைக்கண்காணிப்பாளர் சு.அசோக்குமார், திருச்செங்கோடு வட்டாட்சியர் டி.பாஸ்கர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்