தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்வேறு முருகன் கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. வயலூர், புதுக்கோட்டையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேற காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் முத்துக்கு மாரசுவாமி, உய்யக் கொண் டான் கால்வாயை சென்றடைந்தார். அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். அங்கு தீர்த்தவாரி நடை பெற்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோயிலை வந்தடைந்தார். அங்கு சர்வ அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது. இந்த விழாவில் ஏராள மான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டையில்...
தைப்பூசத்தையொட்டி புதுக்கோட்டையில் உள்ள வெள்ளாற்றங் கரைக்கு திருவேங்கைவாசல் பிரகதாம்பாள் உடனுறை வியாக்ர புரீஸ்வரர் கோயில் சுவாமி, அம்பாள் உற்சவர் சிலைகள், புதுக்கோட்டை பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர், வேதநாயகி உடனுறை சாந்தநாதர், கோட்டூர் மீனாட்சியம்மன் உட னுறை சுந்தரேஸ்வரர் மற்றும் விராச்சிலை சவுந்தரநாயகி உடனுறை வில்வவனேஸ்வரர் ஆகிய கோயில்களின் உற்சவர் சிலைகளும் ஊர்வலமாக வெள்ளாற்றங் கரைக்கு கொண்டுவரப்பட்டன.பின்னர், வெள்ளாற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆற்றில் புனித நீராடினர்.
அரியலூரில்...
அரியலூரில் உள்ள சுப்பிர மணியர் கோயில், கல்லங்குறிச்சி சாலையில் குறைதீர்க்கும் குமரன் கோயில், அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள 22 அடி உயரம் சிலை கொண்ட முரு கன் கோயில் உள்ளிட்ட மாவட் டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருநாளையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பெரம்பலூரில்...
பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மன், வள்ளி-தெய்வானை சமேத முருகன், விநாயகர் ஒரு தேரிலும், காமாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரண்டு தேர்களும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து இன்று(ஜன.29) நிலையை அடையும்.
கரூரில்...
தைப்பூசத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள புகழி மலை, வெண்ணெய்மலை, பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்களில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டங்களை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago