திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி, ஓய்வூதியர் களுக்கான அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பணிக்காலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ரயில்வே துறையில் தனியார்மயத்தைப் புகுத்தக் கூடாது. தொழிலாளர்களுக்கு எவ்வித உச்சவரம்பும் இன்றி இரவுப் பணி படியை வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து, கல்வித் தகுதிக்கேற்ப உடனடியாக வேலை வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ செலவுத் தொகையை நிர்வாகமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்ஆர்இஎஸ் கோட்டத் தலைவர் எல்.பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் எஸ்.ரகுபதி உட்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago