தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
18 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதனை விரைவில் குணப்படுத்துவதே இந்த மையம் அமைக்கப்பட்டதின் நோக்கம். இதனால் எதிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஊனம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் அடையாள அட்டையை ஆட்சியர் வழங்கினார்.
இணை இயக்குநர் (நலப் பணிகள்) நெடுமாறன்; மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ் லின், உறைவிட மருத்துவர் அகத்தியன், மருத்துவர்கள் லதா, கீதா, ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதனை விரைவில் குணப்படுத்துவதே இந்த மையம் அமைக்கப்பட்டதின் நோக்கம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago