திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி தாமிரபரணியில் நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளான கடந்த 22-ம் தேதி நெல்லுக்கு வேலி யிட்ட திருவிளையாடல் வைபவமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரலாற்று புகழ்வாய்ந்த கைலாசபுரம் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய நாயனார், சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் மற்றும் அஸ்திர தேவர், அஸ்திர தேவி சுவாமிகள் பகல் 12.30 மணியளவில் கோயிலில் இருந்து புறப்பாடாகி கைலாசபுரம், சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் சேர்ந்தனர். தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரியும், பின்னர் விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் மண்டபத்திலிருந்து சுவாமிகள் புறப்பாடாகி ரதவீதி களைச் சுற்றி வந்து கோயில் சேர்ந்தனர்.
இன்று சவுந்திர சபா மண்டபத் தில் பிருங்கி முனி சிரேஷ்டர்களுக்கு நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. நாளை (30-ம் தேதி) சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெளித்தெப்பக்குளத்தில் இரவு 7 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago