தைப்பூசத்தையொட்டி திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் அண்ணா மலையாரின் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தீர்த்தவாரி திருவிழா சிறப்பு பெற்றது. தைப்பூசத்தையொட்டி, திருவண் ணாமலை கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க கோயில்களில் ஒன்றான ஈசான்ய லிங்க கோயில் முன்பு உள்ள ஈசான்ய குளத்தில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது.
தீர்த்தவாரியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் மற்றும் உண்ணா முலை அம்மனுக்கு நேற்று அதி காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மங்கள இசை ஒலிக்க, ஈசான்ய குளக் கரையை சுவாமி சென்றடைந் தார். அதன்பிறகு, ஈசான்ய குளத்தில் சூல வடிவிலான அண் ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெற்றது.
தீர்த்தவாரி நிறைவு பெற்றதும், கோயிலுக்கு சுவாமி புறப்பட்ட போது, அண்ணாமலையாரை தம்முடைய மகனாக பாவித்து வழிபட்ட வள்ளால மகாராஜா, போரில் உயிரிழந்த செய்தியை ஓலைச்சுவடி மூலமாக சுவாமிக்கு வாசித்து அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால், தவில் மற்றும் நாதஸ்வர இசை நிறுத்தப்பட்டு, எவ்வித கொண்டாட்டமும் இல்லாமல், குளக் கரையில் இருந்து கோயிலை சுவாமி சென்றடைந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago