திருப்பத்தூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற ஆதிதிராவிட வகுப்பினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் தோல் காலணிகளுக்கான தையல் ஆபரேட்டர், தோல் பொருட்கள் தைத்தல் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங் கவுள்ளன. இதில், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வேலை இல்லாத 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். சான்று பெற்றவர்கள் தொழில் தொடங்க தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்கலாம். மானியத்துடன் கடன் பெறவும் ஏற்பாடு செய்து தரப்படும்.

இது தொடர்பாக, மேலும் விவரங்கள் அறிய விரும்புபவர்கள் தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 94450-29483 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்