கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு 108 ஆம்புலன்ஸால் பயனடைந்த 22,521 பேர்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு 108 ஆம் புலன்ஸ் சேவையை 22,521 பேர் பயன்படுத்தியுள் ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 26 செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 22,521 பேர் 108 பேர் ஆம்புன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் 7,580 பேர் கர்ப்பிணிகள், 2,521 பேர் சாலை விபத்தில் சிக்கியவர்களாவர். குறிப்பாக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 35 கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் பிறந்துள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது 6,138 பேர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வெண்டி

லேட்டர், இசிஜி மானிட்டர் போன்ற அதிநவீனக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் அரசு மருத்து வமனைகளிலும், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி

மருத்துவமனையிலும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. எனவே அரசின் இலவச இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்