நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 23 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக தலா ரூ.2,500 வீதம் வழங்கப் பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2,500 ரொக்கம் மற்றும் சிறப்பு பரிசுத் தொகுப்பையும் அறிவித்தது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 23 ஆயிரத்து 281 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதன்படி மாவட்டம் முழுவதும் ரூ.130 கோடியே 82 லட்சத்து 2 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago